ஊரடங்குச் சட்டத்தை மீறிய 125 பேர் 24 மணி நேரத்தில் கைது

பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் 24 பொலிஸ் பிரிவுகளில் இதுவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று புதன்கிழமை காலை ஆறு மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியிலேயே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் 63 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த நான்காம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 513 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.