‘மவுத்வோஷ்’ பயன்படுத்துவதால் கொரோனா வைரஸ் செயலிழக்கும் ஆய்வில் தகவல்

வாய்வழி கிருமிநாசினிகள், ‘மவுத் வோஷ்” போன்றவை கொரோனா வைரஸை செயலிழக்கச் செய்யும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று மிகத் தீவிரமாகப் பரவி வருகின்றது. இதைக் கட்டுப் படுத்தவும், தடுக்கவும் ஆய்வுகள் நாடுகளில் நடக்கின்றன. இந்நிலையில் பிரிட்டனின் மருத்துவ இதழ் வெளியிட்ட கட்டுரையிலே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்குழு பல வாய்வழி மற்றும் நாசோபார் னீஜியல் வாய்க் கொப்பளிப்பான்களை ஓர் ஆய்வக அமைப்பில் சோதித்தது. அவை மனித கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யும் திறனைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சோதனை செய்யப்பட்ட தயாரிப்புகளில் குழந்தைகளின் ஷம்போ, பெராக்சைட் புண்-வாய் சுத்தப்படுத்திகள் மற்றும் மவுத்வோஷ்கள் ஆகியவை அடங்கும்.

தொற்றுநோய்க்குப் பிறகு வாயில் உருவாகும் வைரஸின் அளவைக் குறைக்க இந்த தயாரிப்புகள் சில பயனுள்ளதாக இருக்கும். அத்துடன் கொரானாவை ஏற்படுத்தும் சார்ஸ், கோவ்-2 இன் பரவலைக் குறைக்க உதவக்கூடும்.

நாசி மற்றும் வாய்வழி சுத்திகரிப்பான்களில் பல மனித கொரோனா வைரஸை நடுநிலையாக்குவதற்கான வலுவான திறனைக் கொண்டுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இது கொரோனா தொற்றுக்கு ஆளான நபர்களால் பரவும் வைரஸின் அளவைக் குறைக்கும் ஆற்றலை இந்த தயாரிப்புகள் கொண்டிருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.