நேற்று மட்டும் 180 பேருக்கு கொரோனா; மினுவாங்கொடை தொற்றாளர்கள் 2,342 ஆக அதிகரிப்பு

நாட்டில் நேற்று மட்டும் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய 120 பேர் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்கள எண்ணிக்கை 2,342 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,805 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 2,335 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதுமுள்ள 21 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 3,457 பேர் குணமடைந்தும் 13 பேர் உயிரிழந்துமுள்ளனர். அதேநேரம் வைரஸ் தொற்று சந் தேகத்தின் பேரில் 297 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத் தக்கது.