நேற்று மட்டும் 87 பேருக்கு கொரோனா

நாட்டில் நேற்று மட்டும் 87 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்தது.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்களே தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தலில் இருந்தவர்களும், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுமே தொற்றுடன் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.