ஊரடங்கினால் வருமானத்தை இழந்தவர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு; அரசு வழங்குகின்றது

ஊரடங்கு சட்டத்தால் வருமானத்தை இழந்தவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், அப்பகுதி மக்களில் பலர் வருமானங்களை இழந்துள்ளனர். இந்த மக்களுக்கே 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதன்படி, சுமார் 75 ஆயிரம் குடும்பங்களுக்கு கொடுப்பனவு வழங்குவதற்காக 40 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்தக் கொடுப்பனவு நாளை செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது எனவும் அவர் கூறினார்.