அநுராதபுரத்துக்கு யாத்திரை சென்ற 5 பிக்குகளுக்கு கொரோனா

மத்துகமை ஓவிடிகல விகாரையில் நேற்று 5 பிக்குகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் துறவிகள் சில நாட்களுக்கு முன்பு யட்டதொல – பதுகமையில் கொரோனா தொற்றுக்குள்ளான தனியார் பஸ் மற்றும் நடத்துநருடன் அநுராதபுரத்துக்கு யாத்திரை சென்றதையடுத்து இவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகினர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மத்துகமை சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில், அதிகமான தொற்றாளர்கள் அகலவத்தை மற்றும் வலலவிட பகுதிகளில் இனங்காணப்பட்டுள்ளனர்.

தற்போது இந்தப் பிரதேசங்கள் உட்பட மத்துகமையிலுள்ள 3 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.