யாழ்ப்பாணம் மக்கள் மத்தியில் கொரோனா தொற்று அச்சத்தை அரசு திட்டமிட்டு ஏற்படுத்தியுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று இல்லாத இடத்தில், கொரோனா சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இது தொடர்பில், மக்கள் மத்தியில் அச்சஉணர்வு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.