இயக்கச்சி படை முகாமில் இராணுவச் சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

கிளிநொச்சி – இயக்கச்சி படை முகாமிலுள்ள இராணுவச் சிப்பாய் ஒருவர் நேற்று சனிக்கிழமை அதிகாலை தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காதல் தோல்வியே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.