விஜயதாச ராஜபக்‌ஷவின் பாதுகாப்பு அதிரடியாகக் குறைப்பு; 20 ஆவது திருத்தத்தை எதிர்த்ததன் எதிரொலி?

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவின் பாதுகாப்பு திடீரெனக் குறைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரான விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு 5 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எனினும், தற்போது 2 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புக் கடமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக விஜேதாஸ ராஜபக்ஷவும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் அவரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.