அதிக ஆபத்தான பகுதியாக கொழும்பு அடையாளம்; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று ஆபத்து அதிகமுள்ள பகுதியாகக் கொழும்பு அடையாளம் காணப்பட்டுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

கம்பஹா மாவட்டம் போன்று கொழும்பும் அதிக ஆபத்துள்ள பகுதியாக இனம் காணப்பட்டுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“நாளொன்றுக்கு 10 ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இதனைச் செய்ய கொரோனா வைரஸ் சோதனை தொடர்பான கொள்கைகளை தரமுயர்த்த வேண்டும் சரியான சோதனைக் கொள் கைகளை அறிவிக்க வேண்டும்” என்றார்.