மினுவாங்கொடை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,789 ஆக அதிகரிப்பு

மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் இதுவரை பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,789 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மேலும் 19 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மினுவாங்கொடை ஆடைத் தொழில்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 10 பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 09 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் நேற்று 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.