கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் இன்று காலை 5.00 மணி முதல் காலவரையறையற்ற ஊரடங்கு

கட்டுநாயக்கா பொலிஸ் பிரிவில் இன்று அதிகாலை 5 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் 43 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்துக்குள் உள்ள தொழிற்சாலைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்று இராணுவத் தளபதி தெரிவித்தார்.

கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்துக்குள் உள்ள தொழிற்சாலைகளின் ஊழியர்கள் தங்கள் உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளைப் பயன்படுத்திப் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டது.