அதிகரிக்கும் கொரோனா பரவல்; மினுவாங்கொட கொத்தணியில் நேற்றும் 113 பேர் அடையாளம்

மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய மேலும் 113 கொரோனா தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை கொத்தணியில் சிக்கி தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட 113 பேரும், தொழில்சாலை ஊழியர்களுடன் தொடர்புகளைப் பேணிய ஐவர் என இவ்வாறு புதிய கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால், மினுவாங்கொடை கொத்தணிப் பரவலில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,721 ஆக அதிகரித்துள்ளது.