ஒவ்வொருவரையும் முத்தமிட விரும்புகிறேன்; கூட்டத்தை அதிர வைத்த ட்ரம்பின் உரை

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

நேற்றுமுன்தினம் புளோரிடாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், “நான் சக்திமிக்கவனாக இருப்பதாக உணர்கிறேன். உங்கள் ஒவ்வொருவரையும் முத்தமிட விரும்புகிறேன்”, என்று தனக்கே உரித்தான நகைச்சுவையுடன் கூறினார். அவரின் பேச்சைக் கேட்டு சிரிப்பால் அதிர்ந்தது கூட்டம்.

கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டார் என்பதை உணர்த்தவே அவர் அவ்வாறு பேசினார் என்று கூறப்படுகின்றது. ஆனாலும், ஜனாதிபதி ட்ரம்ப் தங்கள் விருப்பத்துக்கு மாறாக முத்தமிட்டார் என்று 12 பெண்கள் இதுவரை முறைப்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.