‘ஜோன்சன் அன்ட் ஜோன்சன்’ நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை இடை நிறுத்தம்

அமெரிக்காவின் ‘ஜோன்சன் அன்ட் ஜோன்சன்’ நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனத்தின் தடுப்பூசி பரிசோதனை மூன்றாம் கட்டத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்த ஆய்வில் பங்கேற்ற ஒருவருக்கு ஏற்பட்ட விவரிக்கப்படாத பக்க விளைவு காரணமாகவே இந்த பரிசோதனை நிறுத்தப்பட்டது என்று நிறுவனம் தெரிவித் துள்ளது.

ஆய்வு பங்கேற்பாளரின் தனியுரிமையை நாங்கள் மதிக்க வேண்டும். இந்த பங்கேற்பாளரின் நோயைப் பற்றியும் நாங்கள் அதிகம் கற்றுக் கொண்டு வருகிறோம். மேலும், கூடுதல் தகவல்களைப் பகிர்வதற்கு முன்பு எல்லா உண்மைகளையும் வைத்திருப்பது முக்கியம்” என்று அந்நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.