இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியது

நாட்டில் மேலும் 145 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நாட்டில் மேலும் 145 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத்தாண்டியது.

இதேவேளை நேற்று மட்டும் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 145 பேர் மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

அதன்படி, மினுவாங்கொடை ஆடைத் தொழில்சாலை ஊழியர்களுடன் தொடர்புகளைப் பேணிய 97 பேரும், தனிமைப்படுத்தல் நிலையங்களிலுள்ள 48 பேரும் இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,591 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,038 ஆக உயர்வடைந்துள்ளது. 1,697 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள 13 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 3,328 பேர் குணமடைந்தும் 13 பேர் உயிரிழந்தும்உள்ளனர். அதேநேரம் வைரஸ் தொற்று சந்தேகத்தின் பேரில் 432 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.