யாழ்ப்பாணத்தில் தபால் ஊழியர் தனிமைப்படுத்தல்

பண்டத்தரிப்பு உப தபாலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கொரோனா அறிகுறி சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தொண்டை நோ உட்பட்ட கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்ட அவர் நேற்று யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

சாவகச்சேரியில் வசிக்கும் இந்த நபர் கடந்த முதலாம் திகதி பண்டத்தரிப்பு உப தபாலகத்துக்கு மாற்றலாகியுள்ளார். அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் பின்னரே அவரைச் சார்ந்திருப்பவர்களை தனிமைப்படுத்தவது தொடர்பில் தீர்மானிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.