யூனியன் பிளேஸ் ஆடம்பர தொடர்மாடியில் வசிப்பவர்களிடம் பிசிஆர் சோதனை

கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள ஒன்320 தொடர்மாடியின் குடியிருப்பாளர்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

தொடர்மாடியில் வசிக்கும் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து தொடர்மாடியில் குடியிருப்பவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தியுள்ள அதிகாரிகள் எதிர்வரும் நாட்களில் தொடர்மாடியில் குடியிருப்பவர்கள் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.

டவர் இரண்டில் வசித்தவரே பாதிக்கப்பட்டுள்ளார் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளை சோதனைக்கு உட்படுத்தியதாகவும் அவர்கள் பாதிக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் பகுதியில் உள்ளவர்களை வெளியே செல்லவேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொடர்மாடியை முற்றாக முடக்கவில்லை, ஆனால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அயலவர்கள் ஒருவரையொருவர் தொடர்கொள்ளவில்லை,மக்களை பதட்டப்படவேண்டாம் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் அங்கு வசிப்பவர்கள் அனைவரிடமும் பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள சில நாட்கள் தேவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர் அவரது சகாவொருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார், அவரின் சகோதரர் மினுவாங்கொட ஆடைதொழிற்சாலையில் பணியாற்றுபவர் இதன் காரணமாக நோய் எங்கிருந்து பரவியது என்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

தொடர்மாடிக்குடியிருப்பில் வசிப்பவர்களில் எவராவது இருமல் காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களை உடனடியாக தங்களை தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த தொடர்மாடியில் இராஜதந்திர சமூகத்தை சேர்ந்தவர்களும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அதிகளவு வசிப்பது குறிப்பிடத்தக்கது