யாழ்ப்பாணத்தில் இதுவரை 13 ஆயிரம் பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை; டாக்டர் சத்தியமூர்த்தி தகவல்

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடம் இதுவரை சுமார் 13 ஆயிரம் பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த மார்ச் மாதம் தொடக்கம் நேற்று வரையான காலப் பகுதியில் 13 ஆயிரம் பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மருதங்கேணியிலுள்ள 60 பேரிடமும் புங்குடுதீவு மற்றும் ஏனைய பகுதிகளிலிருந்து சுமார் 100 பேரிடமும் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

எனவே, சமூகத் தொற்று தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் அவர் கேட்டுள்ளார்.