20வது திருத்தத்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் குறித்து விமல்வீரவன்சவின் கட்சி அதிருப்தி- மகிந்தவிற்கு கடிதம்

20வது திருத்தத்தின் நகல்வடிவில் காணப்படும் விடயங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அமைச்சர் விமல்வீரவன்சவின் தேசிய விடுதலை முன்னணி பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

இது குறித்து கட்சியின் தலைவர் விமல்வீரவன்ச பிரதமர் நியமித்த குழுவிடம் தெரிவித்துள்ளார் என கட்சி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
எனினும்; சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள யோசனைகளில் தங்களின் கட்சி தலைவர் சமர்ப்பித்த திருத்தங்கள் இடம்பெற்றிருக்கவில்லை என விமல்வீரவன்சவின் கட்சி தெரிவித்துள்ளது.
20வது திருத்தத்தின் நகல்வடிவில் இடம்பெற்றுள்ள சில விடயங்களுக்கு பொதுமக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது என தெரிவித்துள்ள கட்சி மக்களின் உணர்வுகளை புறக்கணிப்பது அரசாங்கத்துக்கு கிடைத்த மக்களின் ஆணைக்கும் கௌரவத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.
20வது20வது திருத்தத்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் குறித்து விமல்வீரவன்சவின் கட்சி அதிருப்தி- மகிந்தவிற்கு கடிதம்
திருத்தத்தில் உள்ள தவறுகளை சரிசெய்யவேண்டும் என தெரிவித்துள்ள விமல்வீரவன்சவின் கட்சி தங்களின் அரசியல் நிலைப்பாடு புறக்கணிக்கப்பட்டால் 20வது திருத்தத்திற்கு பொறுப்பு ஏற்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளது.