கொரோனாவினால் இது வரையில் மத்திய கிழக்கில் 63 இலங்கையர்கள் மரணம்

கொரோனாவால் இதுவரை 63 இலங்கையர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதில் நூற்றுக்கு 50 வீதமான மரணங்கள் சவூதி அரேபியாவில் பதிவாகியுள்ளன. இந்த தகவல் இலங்கை வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் பிரதி முகாமையாளரும் ஊடக செய்தித்தொடர்பாளருமான மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.