கொரோனா அச்சம்; கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகள்

கம்பஹா மாவட்டத்தின் பல பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுகளால் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமும், விமான நிலைய நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சில கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் மற்றும் வருகை தரும் முனையங்களில் அமைந்துள்ள வணிக நிலையங்களுக்கான வெளியாட்கள் நுழைவுக்கு நண்பகல் 12.00 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளது என விமான நிலைய பொறுப்பு அதிகாரி தெரிவித்தார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய நிர்வாகம், விமான நிலையத்தின் வருகை முனையம் மற்றும் வருகை முனையத்தின் நுழைவாயிலை மூடுவதற்கும், பொது மக்கள் பார்வையாளர் அரங்கம் மற்றும் ஓய்வறைகள் என்பனவற்றை மூடுவது தொடர்பிலும் இன்று முக்கிய தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.