சஜித் – ரணில் விரைவில் சந்தித்துப் பேச்சு?

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலருக்குமிடையில் விரைவில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக அறியமுடிகின்றது.

ஐ.தே.கவின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த ருவான் விஜேவர்தனவுக்கு தொலைபேசி ஊடாக சஜித் வாழ்த்து தெரிவித்தபோது, நேரடிச் சந்திப்புக்கான அழைப்பை ருவான் விடுத்திருந்தார் எனவும், இதன் பிரகாரமே மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

சஜித் தலைமையில் உதயமாகவுள்ள ‘ஐக்கிய கூட்டமைப்பில்’ இணைந்து செயற்படுவது சம்பந்தமாகவும், மாகாணத் தேர்தலை கூட்டாக எதிர்கொள்வது பற்றியும் இதன்போது அவதானம் செலுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.