இந்திய மீனவர்களுடன் தொடர்பு கொண்டனர்; யாழ்ப்பாணத்தில் 90 பேர் தனிமைப்படுத்தலுக்கு

இந்திய மீனவர்களுடன் நெருங்கிப் பழகினர் என்ற சந்தேகத்தில் 9 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும், 90 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு – குடாரப்பு பகுதியில் வாடி வீடமைத்து மீன்பிடியில் ஈடுபட்ட மன்னார் மீனவரகளும் மற்றும் வடமராட்சி கிழக்கு மீனவர்களுமே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடல் அட்டை பிடிப்பில் ஈடுபட்ட இந்த மீனவர்கள் கடந்த 29 ஆம் திகதி 3 படகுகளில் சென்று இந்திய மீனவர்களுடன் தொடர்புபட்டிருந்தனர். இவர்கள் மன்னாரில் உள்ள வீட்டுக்கு திரும்பியிருந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சுகாதாரப் பகுதியினர் கடலுக்கு சென்று திரும்பிய 9 பேரை நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தினர். அத்துடன் அவர்களை விடத்தல்பளை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களுடன் தொடர்பு கொண்ட 81 மீனவர்களை அவர்களின் வாடி வீடுகளிலேயே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வட மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களால் கண்காணிக்கப்படுகின்றனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தனர்.