‘சைபர்’ மிரட்டலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்ள வேண்டும்; நாமல் ராஜபக்‌ஷ

சைபர் இணைய ஊடுருவல் தாக்குதலுக்கு நானும் அகப்பட்டேன் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாமல் ராஜபக்ஷ, தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்;

“சைபர் மிரட்டல் மிகவும் பாரதூரமான குற்றம். அதனை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்ள வேண்டும். சைபர் இணைய ஊடுறுவலில் அனைவரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த இணைய ஊடுருவலில், நான் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, தான் அதன் தாக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது” என்றார்.

சைபர் மிரட்டலைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய முயற்சிகள் குறித்து நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி மற்றும் பிற முக்கிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து நாமல் ராஜபக்ஷ, டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டார்.

“இணைய அச்சுறுத்தல் அல்லது இணையத் துன்புறுத்தல் என்பது மின்னணு வழிகளைப் பயன்படுத்தி கொடுமைப்படுத்துதல் அல்லது துன்புறுத்தலாகும்.தொழில்நுட்பம் முன்னேறியுள்ளமையால் இளைஞர்களிடையே இது அதிகரித்து வருகிறது” என்றார்.