தேசியப் பட்டியல் எம்.பி. பதவி வேண்டாம்; நூல் ஒன்றை எழுதப் போகின்றார் ரணில்

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புத்தகம் ஒன்றை எழுதத் தனது நேரத்தைப் பயன்படுத்தவுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் ரணில் இவ்வாறு குறிப்பிட்டார். கட்சியின் இளம் உறுப்பினர்கள் எதிர்வரும் ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பாடத்திட்டத்தில் பங்கேற்கத் தயார் என்றும் ரணில் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை அவர் நிராகரித்திருந்தார்.

புத்தகம் ஒன்றை எழுதத்திட்டமிருப்பதாலேயே முன்னாள் பிரதமர் அக்கோரிக்கையை நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.