சஜித் கலந்துகொண்ட கூட்டத்தில் கல்வீச்சு; அஞ்சப்போவதில்லை என அவர் அறிவிப்பு

சஜித் பிரேமதாஸ கலந்துகொண்ட கூட்டமொன்றில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் இரவு இரத்மலானையில் இடம்பெற்ற கூட்டமொன்றில், சஜித் பிரேமதாஸ உரையாற்றிக்கொண்டிருக்கும் போது அவரை நோக்கி இனந்தொரியாத சிலர் கற்களை வீசியுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், “இந்த கல்வீச்சு தாக்குதலுக்கு எல்லாம் தான் ஒருபோதும் பயப்படமாட்டேன். எந்தவொரு சவாலையும் எந்நேரத்திலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றேன்” என்றார்.