20 ஆவது திருத்தத்துக்கு எதிரான மனுக்கள்; உயர் நீதிமன்ற விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு

அரசால் கொண்டு வரப்பட்டிருக்கும் 20 ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டவரைவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்கள் மீதான நீதிமன்ற நடவடிக்கை நாளை வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் உள்ளிட்ட 39 மனுக்கள் 20 ஆவது திருத்தச் சட்டத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் மீதான நீதிமன்ற நடவடிக்கை நேற்று முன் தினம் ஆரம்பித்திருந்த நிலையில் 39 மனுக்களையும் சீராய்வு செய்யும் நடவடிக்கைகள் நேற்று முன் தினமும் நேற்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந் நிலையில் விசாரணை நாளை வெள்ளிக்கிழமை மு.பகல் 9.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.