இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,362 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 362 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் நேற்றுமுன்தினம் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டமையையடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

லெபனானில் இருந்து நாடு திரும்பிய இரண்டு பேருக்கே இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 2 பேர் குணமடைந்து நேற்று வைத்தியசாலைகளில்இருந்து வெளியேறினர்.

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 210 ஆகஅதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ்தொற்றுக்கு உள்ளான 139 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேநேரம், இந்த வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.