20 வது திருத்தத்துக்கு எதிராக நாடாளாவிய போராட்டத்துக்கு தயாராகிறது ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு

20வது திருத்தத்துக்கு எதிரான அனைத்து சக்திகளும் இணைந்து பரந்துபட்ட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளன என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கத்தின் செய்தியாளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரட்ண இதனை தெரிவித்துள்ளார்.

மாதுளவாவே சோபித தேரரின் சிலைக்கு முன்னாள் உறுதிமொழி எடுத்த பின்னர் கட்சி 20வது திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஓக்டோபர் ஐந்தாம் திகதி நாடாளவியரீதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் கறுப்புகொடி ஏற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் 20வது திருத்தம் குறித்து மக்களுக்கு துண்டுபிரசுரத்தை விநியோகிக்கும் நடவடிக்கையும் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளாவியரீதியில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சிகளும தொழிற்சங்கங்களும் சிவில் அமைப்புகளும் கலந்துகொள்ளவுள்ள என அவர் தெரிவித்துள்ளார்.