யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பரிசோதனைகளில் 7 பேருக்கு கொரோனா உறுதி

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு வாரங்களில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது என்று யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொடர்பில் அவர் நாளாந்தம் வெளியிடும் அறிக்கையிலேயே நேற்று இதனைத் தெரிவித்தார்.

அதில் மேலும், ‘கடந்த 14 நாட்களாக நடைபெற்ற பரிசோதனையில் 15,22 ஆம் திகதிகளில் இரணைமடு தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த மூவருக்கும், 25 ஆம் திகதி முழங்காவில் தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த ஒருவருக்கும், 26 ஆம் திகதி விடத்தல்பளையை சேர்ந்த மூவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதேவேளை, கடந்த 14 நாட்களாக 662 பேருக்கான பரிசோதனைகள் யாழ். போதனாவைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.