கொரோனாவை விட ஊரடங்கால் அதிக இழப்புக்கள் ஏற்படலாம்: பிரித்தானிய அரசுக்கு இரகசியத் தகவல்

இங்கிலாந்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள கொரோனா பரவாமல் தடுக்கப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால்,வேறு பிரச்னைகளால் 75 ஆயிரம் பேர் உயிரிழப்பர் என்று இங்கிலாந்து அரசுக்கு வழங்கப்பட்ட இரகசிய ஆவணத்தில் தெரியப் படுத்தப் பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் அங்குஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இந்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அரசின் அவசரகாலஅறிவியல் ஆலோசனைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள திகிலூட்டும் இந்த ஆய்வு,கொரோனாதொடர்பில் மேலும் அதிககட்டுப்பாடுகளை விதிக்கவிடாமல் பிரதமர் பொரிஸ் ஜோன்சனை அதிக அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

மேலும் அந்தஆவணத்தில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் மட்டும் மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்களில் ஏற்பட்டகுழப்பங்களால் 16ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சிதகவலும் அதில், வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் தொடர்ந்து விபத்துமற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படாவிட்டால், இன்னும் ஓராண்டுக்குள் 26 ஆயிரம் பேர் உயிரிழப்பர். புற்றுநோய், நிறுத்தப்பட்ட அறுவைசிகிச்சை, நாணயப் பெறுமதி வீழ்ச்சியால் 31 ஆயிரத்து 900 பேர் உயிரழப்பர் என்றும் கூறப்படுகின்றது. இதேவேளை, கொரோனா தொற்றால், 41 ஆயிரத்து 936 பேரே உயிரழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.