தனுரொக் மீது யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டுத் தாக்குதல்; பின்னணி குறித்து பொலிஸ் விசாரணை

மானிப்பாயைச் சேர்ந்த தனுரொக் என்ற இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலுக்கு முன்பாக மணிக்கூட்டு வீதியில் இன்று நண்பகல் இந்த வாள் வெட்டு வன்முறை இடம்பெற்றுள்ளது. காரில் வந்த வன்முறைக் கும்பல் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை வாளால் வெட்டிவிட்டு அந்த இடத்திலிலிருந்து தப்பித்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த தனுரொக் யாழ். போதனா வைத்தியசாலை யில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப் பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.