20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நீதிமன்றம் செல்லவுள்ளதாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், உத்தேச திருத்தத்தில் பல தவறுகள் உள்ளன எனவும் குறிப்பிட்டார்.
புதிய அரசாங்கத்தை உருவாக்குவது குறித்து கருத்துக்கள் வெளியாகியுள்ள போதிலும் தற்போதைய அரசாங்கம் அதற்கான உறுதியான கால எல்லையை அல்லது யோசனைகளை முன்வைக்கவில்லை என ஹக்கீம் கூறினார்.
பாராளுமன்றத்தின் அதிகாரங்களைக் குறைத்து ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கு 20ஆவது திருத்தம் முயல்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.