சவால்கள் பலவற்றை சுதந்திரக் கட்சி எதிர்கொள்ள நேரிடும்; முன்னாள் ஜனாதிபதி மைத்திரி எச்சரிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போதைய அரசின் பங்காளியாக அனைத்துச் சவால்களையும் எதிர்கொள்ள நேரிடும் என முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடை பெற்ற வைபவம் ஒன்றின் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குப் பல சவால்கள் ஏற்படலாம். பதவிகள் பறிபோகலாம். மக்களுக்குச் சவால்கள் இருக்கின்றன. 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக எமக்கும் பல பிரச்னைகள் இருக்கின்றன” என்றார்.