உலகின் செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியலில் மோடியின் பெயர்

செல்வாக்குமிக்க 100 நபர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல “ரைம்ஸ்” வார இதழ் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடம்பெற்றுள்ளார்.

“ரைம்ஸ்” இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், சீன ஷி ஷின்பிங், ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல், தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிடும் ஜோ பிடன், அக்கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹரிஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுடன் இந்தியப் பிரதமர் மோடியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. “ரைம்ஸ்’ இதழ் வெளியிட்ட 100 முக்கிய செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில் இதற்கு முன்பும் மோடி இடம்பெற்றிருந்தார்.