பாரிஸ் ஜபல் கோபுரப் பகுதியில் வெடிகுண்டு அச்சுறுத்தல்; வெளியேற்றப்பட்ட மக்கள்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வெடிகுண்டு மிரட்டலையடுத்து பிரபல ஐபல் கோபுரத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

கோபுரத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கடந்த புதன்கிழமை பாரிஸ் பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது. அதனையடுத்து அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஐபல் கோபுரத்தைச் சுற்றிய பகுதி பொதுமக்களுக்கு மூடப்பட்டது.

பொலிஸார் வெடிகுண்டைத் தேடும் பணியில் இறங்கினர். 2 மணி நேரத்துக்குப் பின் தேடல் பணி முடிவுற்றது. சந்தேகிக்கும்படி எதையும் கண்டுபிடிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து மக்கள் அங்கு செல்ல மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.