திலீபன் நினைவுதினமான நாளை செல்வச்சந்நிதி ஆலயத்தில் உண்ணாவிதம்; தமிழ்க் கட்சிகள் அழைப்பு

திலீபனின் நினைவு தினமான 26 ம் திகதி செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. நீதிமன்றத்தின் தடை உத்தரவை தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அவசரமாக ஒன்றுகூடிய பத்து தமிழ் கட்சிகள் இது குறித்துதீர்மானித்துள்ளன. 26ம்திகதி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை ஆலயங்களில் விசேட பூஜைகள் மூலமும் வீடுகளில் இருந்தவாறும் நினை கூருமாறு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

அன்றைய தினம் செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் காலை எட்டுமணி முதல் மாலை ஐந்து மணிவரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. எதிர்வரும் 28 ம்திகதி திங்கட்கிழமை வடகிழக்கில் மாகாணம் தழுவிய ஹர்த்தாலுக்கும் தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.