மஹிந்த – மோடி முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடல் நாளை ; காணொளி மூலம் நடைபெறுகின்றது

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான முக்கியத்துவமிக்க காணொளி ஊடான கலந்துரையாடலொன்று நாளை சனிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தல் தொடர்பில் இதன்போது இருவரும் கலந்துரையாடவுள்ளதாகவும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

கொவிட் 19 காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள், எதிர்காலத்தில் பிராந்திய பொருளாதார சவால்களை வெற்றிக்கொள்ளல் மற்றும் இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை காண்பதற்கான நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் உரையாடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதம அமைச்சராக பதவியேற்றபின்னர் கடந்த பெப்ரவரி மாதம் இந்தியா சென்று பாரத பிரதமர் மோடியை பிரதமர் மஹிந்த ராஜபக்ச சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே இந்த கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.