தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா உறுதி; தனியார் மருத்துவமனையில் அனுமதி

தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சிகிச்சைக்காக அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக இன்று காலை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகாலமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஓய்வில் இருக்கிறார் விஜயகாந்த்.

இந்த நிலையில் விஜயகாந்த் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையின் முடிவில் விஜயகாந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.