கொரோனா தொற்று என்றுமில்லாதவாறு உலகளவில் பரவி வருகின்றது. கடந்த 14 – 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 20 இலட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்றியுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னைய வாரத்துடன் ஒப்பிடுகையில் இது 6 வீதம் அதிகம் என்றபோதிலும், மரண வீதம் 10 வீதத்தால் குறைந்துள்ளது. எனினும், இந்த வாரத்தில் 36 ஆயிரத்து 764 பேர் மரணத்தை தழுவியுள்ளனர்.
தொற்றுக்கு இலக்கான 20 இலட்சம் பேர், வட, தென் அமெரிக்க கண்டங்களை சேர்ந்தவர்கள். பலி எண்ணிக்கையைப் பொறுத்தவரை ஐரோப்பாவே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு இறப்பு எண்ணிக்கை 27 வீதத்தால் அதிகரித்துள்ளது என்றும் அந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.