சீனாவிலிருந்து இயங்கிய 150 பேஸ்புக் கணக்குகள் தடை; அமெரிக்காவுக்கு எதிராக இயங்கியவையாம்

சீனாவிலிருந்து இயங்கிய 150 போலி ‘பேஸ்புக்’ கணக்குகளைத் தடை செய்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,

“நாங்கள் விதிமுறைகளுக்கு மாறாகச் செயல்பட்ட 155 பேஸ்புக் கணக்குகள், 9 குழுக்கள், ஆறு இன்ஸ்ட்ராகிராம் பக்கங்களை நீக்கியுள்ளோம். இதில் 150 பேஸ்புக் கணக்குகள் சீனாவைச் சேர்ந்தவை. இவை அமெரிக்கத் தேர்தல் பற்றிய தகவல்களைப் பதிவேற்றிக்கொண்டிருந்தன” என்று தெரிவித்துள்ளது.

போலிக் கணக்குகள் தொடர்பாக, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகளைக் கவனமாகக் கண்காணித்து வருகிறோம் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்தது.