20 கோடி பேர் கண்டுகளித்த சென்னை – மும்பை ஆட்டம்

ஐ.பி.எல். ரி-20 போட்டியின் முதல் ஆட்டமான சென்னை – மும்பை அணிகளின் ஆட்டத்தை 20 கோடி பேர் கண்டுகளித்துள்ளனர்.

13 ஆவது ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடந்த 19 ஆம் திகதி தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தை சென்னை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.

இந்தப் போட்டியை 20 கோடி பேர் தொலைக்காட்சியில் கண்டுகளித்தனர். இது புதிய சாதனையாகும். இதுவரை லீக் போட்டியில் இவ்வாறானதொரு சாதனை நிகழ்த்தப்படவில்லை என்று கூறப்படுகின்றது.