கொரோனாவுக்கு ரஷ்ய தடுப்பூசி பெறுகிறார் இலங்கைத் தூதுவர்

எதிர்காலத்தில் கொரோனா வைரஸ்தொற்றுக்கு எதிரான ரஷ்யாவின் தடுப்பூசியை போட திட்டமிட்டுள்ளார் என இலங்கைக்கான மொஸ்கோ தூதுவர் லமா வன்ஸ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குஎதிரான நடவடிக் கைகள் தொடர்பாக நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு –

நான் இலங்கையிலிருந்து மொஸ்கோவந்தவுடன், எதிர்காலத்தில் ஸ்புட்னிக் விதடுப்பூசியைப் பெறத் தயாராக இருக்கிறேன். இந்த தடுப்பூசியானது தற்போது, 3 ஆம் கட்ட சோதனைகள் வழியாகச் செல்கிறது. அதில் பங்கேற் பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.- என்று அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு முதல் முதலில் தடுப்பூசியை பதிவு செய்த நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது. அந்த நாடு தற்போது, 20 இற்கும் மேற்பட்ட நாடுகளுடன் ஒரு பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்குவதற்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது.

ரஷ்ய சுகாதார அமைச்சின் கூற்றுப் படி, ஸ்பூட் னிக் வி பாதுகாப்பானது மற்றும் வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் திறன் கொண்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைக ளின் தேவையான 3 ஆம் கட்ட தடுப்பூசியை இன்னும் முடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.