யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலையில் சரிவு

யாழில் தங்கத்தின் விலை நேற்று சற்று சரிவடைந்துள்ளது. கடந்த வாரம் தங்கத்தின் 3 ஆயிரத்து 500 ரூபாவால் உயர்வடைந்த நிலையில் நேற்று ஆயிரத்து 500 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

தங்கம் இறக்குமதி மீதான வரி 15 சதவீதம் முழுமையாக நீக்கப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த ஆம் திகதி அறிவித்த நிலையில் தங்கத்தின் விலை 10 ஆயிரம் ரூபாவால் குறைக்கப்படும் என எதிபார்க்கப்பட்டது.

எனினும் இறக்குமதி மீதான வரி நீக்கத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலையை உடனடியாக குறைக்க முடியாது என தங்கம் இறக்குமதியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

அதன் பிரகாரம் யாழ்ப்பாணத்தில் நேற்று 22 கரட் தங்கத்தின் விலை 91 ஆயிரத்து 700 ரூபாவாக குறைவடைந்துள்ளது. கடந்த 2 தினங்களாக ஒரு பவுண் ஆபரணத் தங்கம் 93 ஆயிரத்து 50 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. 24 கரட் தூய தங்கம் பவுண் ஒன்று ஒரு லட்சம் ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.

கடந்த 2 தினங்களாக 24 கரட் தூய தங்கத்தின் விலை பவுண் ஒரு லட்சத்து ஆயிரத்து 500 ரூபாவாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.