அனைவருடனும் கலந்துரையாடி திருத்தங்களுடன் கொண்டுவாருங்கள்; பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாச

20 ஆவது திருத்தத்தை அரசாங்கம் வாபஸ்பெற்று அனைவருடனும் கலந்துரையாடி ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையிலான திருத்தங்களை கொண்டுவந்தால் அதற்கு நாங்கள் ஆதரவளிப்போம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கட்டளை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், “பாராளுமன்றத்தின் கெளரவத்தை சீரழிக்கும் வகையிலே 20ஆவது திருத்த சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. 19ஆவது திருத்தத்தில் இருக்கும் ஜனநாயகத்தை பாதுகாத்து உறுதிப்படுத்தும் விடயங்கள் அனைத்தும் இதன் மூலம் நீக்கப்பட்டுள்ளது. ஜனநாயக்தை நேசிப்பவர்கள் எவரும் இதற்கு ஆதரவளிக்க மாட்டார்கள். பணத்துக்காகவும் அமைச்சுப் பதவி மற்றும் ஏனைய வரப்பிரசாதங்களுக்காகவும் காட்டிக் கொடுப்பவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில்இல்லை” என்றார்.