20 ஆவது திருத்தத்துக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு; சட்டத்தரணி இந்திக்க கால்லகே தாக்கல்

20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

20 ஆவது திருத்தத்தை வாக்கெடுப்பில்லால் நிறைவேற்ற முடியாதென்று சவால் விடுத்து சிறப்பு விண்ணப்பம் ஒன்றை நேற்று அவர் தாக்கல் செய்துள்ளார்.

ஒரு வார காலத்தினுள் இதற்கு எதிராக யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் 21 நாட்களுக்கு 20ஆவது திருத்தம் தொடர்பாக எந்த முன்னெடுப்பையும் பாராளுமன்றத்துக்குள் முன்னெடுக்க முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.