மீண்டும் கொரோனா பரவலால் இங்கிலாந்தில் கடுமையாக்கப்படும் ஊரடங்கு

பிரிட்டனின் மீண்டும் அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக கடுமையாக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 9 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக பிரிட்டனும் இருந்து வருகிறது. இங்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆனால் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடந்து அதிகரித்து வந்தது. இதனை அடுத்து அந்நாடு மேற்கொண்ட துரிதமான பரிசோதனை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக அங்கு மே மாதத்துக்கு பின்னர் நோய் பாதிப்பு பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டது. இதனை தொடந்து ஜூன் மாதம் முதல் அந்நாட்டின் பல்வேறு கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கூட்டமாக 6 பேருக்கும் மேல் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பெரும்பான்மையான ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு கடந்த இரண்டு வாரங்களாக மீண்டும் வைரஸ் பாதிப்பு அங்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பிரிட்டனின் நார்தம்பர்லேண்ட், வடக்கு மற்றும் தெற்கு டைன்சைட், நியூகேஸில்-அப்-டைன், கேட்ஸ்ஹெட் மற்றும் கவுண்டி டர்ஹாம் உள்ளிட்ட பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளதால் வடக்கு, வடமேற்கு மற்றும் மத்திய இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுவதாக தெரிவித்தார்.

வரும் 28 ஆம் தேதி முதல் மக்கள் கொரோனாவுக்கு நேர்மறையை சோதித்தால் அல்லது தேசிய சுகாதார சேவை (என்.எச்.எஸ்) மூலம் கூறப்பட்டால் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழி, எல்லோரும் விதிமுறைகளைப் பின்பற்றி, கொரோனா வைரஸைக் கடக்கும் அபாயத்தில் இருந்தால் அவர்களைத் தனிமைப்படுத்துவதாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது அறிகுறிகள் அல்லது கொரோனாவுக்கு நேர்மறை சோதனை உள்ளவர்கள் 10 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை சுயமாக தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் கொரோனா பரபவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மீறுபவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய அபராதங்கள் 1,000 பவுண்டுகளில் முதல் 10 பவுண்டுகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை மீண்டும் மீண்டும் மீறுபவர்களுக்கு 10 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும். என அவர் தெரிவித்துள்ளார்.