நியூடயமண்ட் கப்பல் எண்ணெய் கசிவு கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பு; கடல் மாசுபாடு தடுப்பு அதிகார சபை

நியூடயமண்ட் கப்பலிலிருந்து கசிந்த எண்ணெய்படிவால் கடல் வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று கடல் மாசுபாடு தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே கப்பலிலிருந்து கடலில் கசிந்த மசகு எண்ணெயின் அடர்த்தியைக் குறைப்பதற்கு கடல் மாசுபாடுதடுப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

கப்பலுக்கு அருகிலிருந்து 2 கடல் மைல் தொலைவு வரை எண்ணெய் படிமங்கள் படிந்துள்ளன என்று கடல்மாசுபாடு தடுப்பு அதிகார சபையின் பொதுமுகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப் குமார தெரிவித்தார்.

குறித்த எண்ணெய்படிமங்களில் விமான படையின் மூலம் படிமங்களின் அடர்த்தியை குறைப்பதற்கான திரவம் விசிறப்படுபிறது என்றும் எண்ணெய் படிமத்தின் ஊடாகப் படகினை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், எண்ணெய் படிவம் தொடர்ந்தும் கடலில் உள்ளதால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என கடல் மாசுபாடு தடுப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.