13 ஆவது திருத்தச் சட்டம் ஒருபோதும் இரத்துச் செய்யப்படமாட்டாது; அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் ஒருபோதும் இரத்துச் செய்யப்படமாட்டாது” என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். மாகாண சபைகள் ஊடாக அரச சேவைகள் முறையாக இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மாகாண சபைகள் ஊடாக அரச சேவைகள் முறையாக இடம்பெறுகின்றன. ஒரு சில மாகாண சபைகளில் குறைப்பாடுகள் காணப் படுகின்றன. அவை திருத்தம் செய்யப்பட்டு மாகாண சபைகளும் சிறந்த முறையில் செயற்படுத்தப்படும்” என்றார்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு விரைவில் முடிவு கட்டுவோம் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பல தடவைகள் பகிரங்கமாகத் தெரிவித்து வந்த நிலையில், தற்போது அந்தத் திருத்தச் சட்டம் ஒரு போதும் இரத்துச் செய்யப் படமாட்டாது என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.